Department of
Expenditureன் Direcetor
(ADM) திரு.விஜய்குமார் சிங், Under Secretary திரு விவேக் ஆஷிஸ் மற்றும் Section
Officer திரு சஞ்சய் குமார் ஆகியோர்களை தோழர். நம்பூதிரி, AIBDPA பொதுச் செயலர் தொழர்.ஜெயராஜ் ஆகியோர் 26.02.2014 அன்று சந்தித்து ஓய்வூதியர்களுக்கு 78.2% பலனுக்கான ஒப்புதல் பற்றி விவாதித்தனர். தேவையற்ற கால தாமதம்
ஏற்பட்டுள்ளதை நமது தரப்பில் இருந்து எடுத்துரைத்தனர். முடிவில், ஓரிரு நாட்களில்
ஒப்புதல் வழங்குவதற்கான நடைமுறையைத் துவக்கி தாமதமின்றி விரைந்து முடிவு எடுக்க உறுதி
அளித்துள்ளனர்.
|
Thursday, 27 February 2014
ஓய்வூதியர்களுக்கு 78.2% பலன்
Monday, 17 February 2014
Friday, 7 February 2014
ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்
குழு கூட்டம் பூமாலை வணிக வளாகம், காரைக்குடியில் 04.02.14 அன்று ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவர், தோழர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே, BSNL,
தபால் துறை, EB, வங்கி, போக்குவரத்து, LIC, ஆசிரியர்கள் ஆகிய 15க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள்
சங்கங்களில் இருந்து 100க்கும் அதிகமான தோழர்கள் ஆர்வத்துடன் பங்கு
பெற்றனர்.
ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர், தோழர். V.சுப்ரமனியன் 18ம் தேதிய தர்ணா பற்றியும்
கோரிக்கைகள் பற்றியும் விளக்கவுரை ஆற்றினார். தோழர். முத்துராமலிங்கம், தோழர். ராதாகிருஷ்ணன்
ஆகியோர் தற்போதைய நிலவரங்களை எடுத்துரைத்தனர். தோழர்.C.சுப்ரமணியன், CITU பல்வேறு பிரச்சனைகளை
மிக ஆழமாக விவரித்தார்.
ரூ.3500 குறைந்த பட்ச ஓய்வூதியம், 12 ஆண்டுகளுக்குப் பின் முழு
ஓய்வூதியத்தை வழங்குவது, போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
18ம் தேதிய தர்ணாவில் பெருந்திரளாகக் கலந்து
கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
தோழர். கோவிந்தராஜன், நன்றியுரைத்தார்.
சர்வதேச ஓய்வூதியர்கள் சங்கம்
ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின்
சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 5, 6 தேதிகளில்
பார்சிலோனாவில் நடைபெற்றது.
அதில் 30 தேசங்களில்
இருந்து சார்பாளர்கள் கலந்து கொண்டனர்.
AIBDPA சார்பாக தோழர் நம்பூதிரி சார்பாளராகக் கலந்து கொண்டார்.
தோழர். க்யும் பாக்க்ஷ் தலமை தாங்கினார்.
அதில் ஓய்வூதியர்களுக்கான சர்வதேச சம்மேளனம் உருவாக்குவது
என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“சர்வதேச ஓய்வூதியர்கள் மற்றும் பணிஓய்வு பெற்றவர்களின்
சர்வதேச தொழிற்சங்கம்”
Trade Union
International of Pensioners and Retirees (TUI of P&R)
என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்!
Monday, 3 February 2014
சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
புதிய பென்சன்
திட்டத்தை எதிர்த்தும்
ஒய்வூதியர்களின்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்
18.02.2014 அன்று நடைபெற உள்ள தர்ணா பொராட்டத்தை
சிறப்பாக நடத்துவது
பற்றி விவாதிப்பதற்காக,
சிவகங்கை மாவட்ட
ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் 04.02.2014 அன்று காலை 10 மணிக்கு
கண்ணதாசன் மணிமண்டபத்தின்
எதிரில் உள்ள
பூமாலை வணிக வளாகத்தில்
நடைபெறும்.
ஓய்வூதியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்!
தோழமையுள்ள,
V.சுப்ரமணியன் K.கிருஷ்ணமூர்த்தி
செயலர் தலைவர்
Subscribe to:
Posts (Atom)