Friday, 28 August 2015

காரைக்குடி FNTO 
சங்க கிளைச்செயலர்  அன்புத்தோழர்.

K.சேக் தாவூது TM

அவர்கள் இன்று 28/08/2015 மதியம்  
ஜும்மா தொழுகையில் 
இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் போதே
 இறைவனடி சேர்ந்தார்.

அனைவரிடமும் 
சகோதரத்துவமுடன் பழகிய தோழர். 
சங்க வித்தியாசம் இல்லாமல் 
நம்மிடம் மிகுந்த தோழமையுடன் 
பழகிய சகோதரர். 

வரது மறைவிற்கு AIBDPA KARAIKUDI
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்

Wednesday, 19 August 2015



AIBDPA அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில்.

              பெரும்பான்மையான மத்தியச் சங்க செயற்குழு மற்றும் அனைத்து மாநிலச் சங்கச் செயலர்களின் ஒப்புதலோடும் நமது அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில் வைத்து நடைபெறும் என நமது பொதுச் செயலர் தோழர்.K.G. ஜெயராஜ் அறிவித்துள்ளார்.

                     மத்திய செயற்குழு 2015 டிசம்பர் 7ம்தேதி நடைபெரும் எனவும் அதற்கான பயண ஏற்பாடுகளை மாநில, மாவட்டச் செயலர்கள் உரிய முறையில் செய்திட வேண்டியுள்ளார்

Tuesday, 18 August 2015




பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ஒரு கோடியே 78 லட்சம் செல்ஃபோன் வாடிக்கையாளர்களையும் 20 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் இழந்ததாக தொலைத்தொடர்பு அமைச்சக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
 
தனியார் நிறுவனங்களை போல பிஎஸ்என்எல் வலுவான சந்தைப்படுத்தும் யுக்திகளை கையாளாதது அந்நிறுவனத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் 2008-2012 காலகட்டத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்படாததும் அந்நிறுவனத்தின் நலிவுக்கு காரணமானதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக அந்த அலுவலர் தெரிவித்தார்.