Thursday, 24 December 2015
Monday, 21 December 2015
ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கி உடனே வழங்கிடக்கோரி கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம்.
பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட 78.2% பஞ்சப்படி இணைப்பு பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்யும் DOT, BSNL நிர்வகத்தைக் கண்டித்தும் 78.2% பஞ்சப்படி இணைப்பை உடனே வழங்கிடக் கோரியும் மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2015 அன்று ” கருப்பு பேட்ஜ் ” அணிந்து கண்டன முழக்கமிட 10-12-2015ல் டெல்லியில் கூடிய அகில இந்திய FORUMத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலத்திலும் FORUMத்தின் முடிவினை அமுல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Wednesday, 9 December 2015
சென்னை மற்றும் கடலூர் மக்களின் துயரில் பங்கெடுக்கும் விதமாக வெள்ள நிவாரண நிதி வழங்கிடுவோம்.
கடந்த பல தினங்களாக சென்னை, கடலூர், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் சந்தித்திராத கனமழையால் (1650 மிமீ), பெருவெள்ளத்தால் பெரும் சேதங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சென்னை, கடலூர் மக்கள் தங்களது வாழ்வாதரங்களை (உடை, உணவு, குடிநீர், இருப்பிடம்) என அனைத்தையும் இழந்து வீதியில் உள்ளனர். அவர்களின் வீட்டிற்கு தேவையான அல்லது இருந்து அழிந்து போன அனைத்து பொருட்களையும் மீட்டெடுக்க பல மாதங்கள் /வருடங்கள் ஆகலாம். ஆனால் உடனடித் தேவைகளை வழங்கிட குறைந்தபட்ச நிதி அவசிய அவசரமாகும்.
பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவிட பல தனியார் தொண்டு நிறுவனங்கள், பல மாநில அரசுகள், தனியார்கள் என தம்மால் இயன்ற பொருளுதவிகளை / நிதியினை வழங்கி வருகின்றனர். அந்த வழியில் நாமும் அவர்களுக்கு உதவிட நமது மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுகிறது.
மாவட்டச் சங்கங்கள் உரிய கவனம் செலுத்தி தங்களால் இயன்ற நிதியினை வசூலித்து மாநிலச் சங்கத்தின் வங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.
மாநிலச் சங்க வங்கி கணக்கு எண் :
ALL INDIA BSNL DOT PENSIONER ASSOCIATION TAMIL NADU CIRCLE.
A/C NO. 31557138649 .
STATE BANK OF INDIA – SINMAIYA NAGAR Branch.
SAVINGS ACCOUNT,
IFSC code : SBIN 0007990
Subscribe to:
Posts (Atom)