Thursday, 28 April 2016
Saturday, 16 April 2016
78.2 D.A இம்மாத (ஏப்ரல் ) இறுதிக்குள் கிடைக்க ஏற்பாடு – DOT செயலர் அறிவிப்பு.
12-04-2016 அன்று AIBDPA ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரி DOT செயலர் திரு. ஜெ. எஸ். தீபக் அவர்களை சந்தித்து 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பு பற்றிய கேள்விக்கு ஜெ. எஸ். தீபக் அவர்கள் தாம் அனுமதி அளித்துவிட்டதாகவும் அதனை கேபினட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் கூறினார். மேலும் இம்மாத இறுதிக்குள் உத்தரவு வரலாம் என்பதையும் தெரிவித்தார்.
நமது தலைவர்கள் தொடர்ந்து நிர்வாகத்தையும், அமைச்சரையும் பார்த்தும், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம், தார்ணா, உண்ணாவிரதம் என்று பல கட்ட போராட்டங்களை நமது சங்கம் நடத்தியதன் பயனாக 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பு கையெழுத்தாவதற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்காக பாடுபட்ட தோழர் V.A.N. நம்பூதிரி மற்றும் மத்தியச் சங்கத்தை பாராட்டுவோம்.
Subscribe to:
Posts (Atom)