Monday 27 July 2015

அப்துல் கலாம்| கோப்புப் படம்

 ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்களிடையே மரித்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

AIBDPA KARAIKUDI DIP ITS FLAG.....

Friday 24 July 2015

சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.

                 மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.

கூட்டு தலைமை :

தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.

தோழர். B. சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.

22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார். 

              உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர். R. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU  & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.

Jpeg

Tuesday 21 July 2015



உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தவர் : S. செல்லப்பா, அகில
Jpeg

 இந்திய உதவிச் செயலர் & மாநிலத்தலைவர், BSNLEU

மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 21-07-2015 & 22-07-2015.

          AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து சென்னை RKரோட்டில் உள்ள PCCA அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது.Jpeg

சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரதம் 21 & 22-07-2015.

Jpeg

Thursday 16 July 2015

2015ஜூலை 21, 22 தேதிகளில் சென்னை CCA அலுவலகம் முன்பு நடைபெறும்.

கோரிக்கைகள்

  1. 10-06-2013 முன்பு பணிஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 78.2 % பஞ்சப்படி  உத்தரவை உடனே வழங்கு !

  2. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனே வழங்கு ! !

இழந்த உரிமைகளை மீட்டெடுக்க