Tuesday 18 August 2015




பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ஒரு கோடியே 78 லட்சம் செல்ஃபோன் வாடிக்கையாளர்களையும் 20 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் இழந்ததாக தொலைத்தொடர்பு அமைச்சக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
 
தனியார் நிறுவனங்களை போல பிஎஸ்என்எல் வலுவான சந்தைப்படுத்தும் யுக்திகளை கையாளாதது அந்நிறுவனத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் 2008-2012 காலகட்டத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்படாததும் அந்நிறுவனத்தின் நலிவுக்கு காரணமானதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக அந்த அலுவலர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment