Friday 7 February 2014

ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்



மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பூமாலை வணிக வளாகம், காரைக்குடியில் 04.02.14 அன்று ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், தோழர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ரயில்வே, BSNL, தபால் துறை, EB, வங்கி, போக்குவரத்து, LIC, ஆசிரியர்கள் ஆகிய 15க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் சங்கங்களில் இருந்து 100க்கும் அதிகமான தோழர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். 

ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர், தோழர். V.சுப்ரமனியன் 18ம் தேதிய தர்ணா பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் விளக்கவுரை ஆற்றினார். தோழர். முத்துராமலிங்கம், தோழர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தற்போதைய நிலவரங்களை எடுத்துரைத்தனர். தோழர்.C.சுப்ரமணியன், CITU பல்வேறு பிரச்சனைகளை மிக ஆழமாக விவரித்தார்.
ரூ.3500 குறைந்த பட்ச ஓய்வூதியம், 12 ஆண்டுகளுக்குப் பின் முழு ஓய்வூதியத்தை வழங்குவது, போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
18ம் தேதிய தர்ணாவில் பெருந்திரளாகக் கலந்து கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
தோழர். கோவிந்தராஜன், நன்றியுரைத்தார்.

No comments:

Post a Comment