Wednesday 26 March 2014


டெலிபென்சனர் இதழில் இருந்து. . . .

கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம்











நமது நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமான கால கட்டத்தில் நடைபெறுகிறது .

நாம் ஒட்டு போடுமுன் BSNL யும் நமது பென்சனையும் பாதுகாக்கிற முறையில், நமது கடந்த கால அனுபவங்களையும் மனதில் கொண்டு முடிவெடுப்போம்.
1 .நமது  தோழர்கள் தியாகங்கள் பல செய்து போராடி பெற்று தந்த சமுக பாதுகாப்பான “statutoty pension” திட்டத்தின் மீது 1.1.2௦௦4ல் பிஜேபி அரசு தாக்குதல் நடத்தி “contributary pension”என்ற பாதுகாப்பற்ற திட்டத்தை அதிரடியாக அரசு ஊழியர்கள் மீது திணித்தது. அப்போது எதிர்கட்சியான காங்கிரஸ் அதை ஆதரித்தது.
2 . அடுத்து வந்த காங்கிரஸ் அரசு PFRDA என்றமோசமான பென்சன் திட்டத்தை பாராளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றியது.எலியும் பூனையுமாக சண்டையிட்டு கொண்டிருந்த காங்கிரசும் பிஜேபியும் ஒற்றுமையாக அந்த சட்டத்தை நிறைவேற்றினர்.இடதுசாரி MPக்கள் மட்டுமே கடுமையாக எதித்தனர்.
இந்த நிலையில் காங்கிரசோ பிஜேபியோ ஆட்சிக்கு வந்தால் அடுத்த குறி பழையபென்ஷன் பெற்றுகொண்டிருக்கும் நம் மீது கை வைப்பதுதான்..
3 காங்கிரஸ் அரசின் கொள்கைகலால் நமது BSNL ஆண்டுதோறும் நஷ்டமடைந்து வருகிறது. மேலும் மூழ்கிய நிலையில்உள்ள MTNL இணைப்பது என்றே முடிவை திணிக்கிறது,
4. ஒரு பக்கம் 56% மக்கள் வறுமையில் வாட,3.லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள,
மறுபக்கம்இருபத்திஎட்டுலட்சம் கோடி ரூபாய் பணத்தை CARPORATE நிறுவனகளுக்கு சலுகை அளித்து
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
இப்போது நம் முன் நிற்கும் கேள்வி. இந்த அரசுகள் தொடரலா? நம்மை நசுக்க முயலும் காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்குமாற்றாக நம்மை பாதுகாக்கும் மாற்று திட்டத்தை முன் வைத்து போராடும்  இடதுசாரி வேட்பாளர்களை தேர்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம்

No comments:

Post a Comment