Friday 19 December 2014

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக புரபஷனல் கூரியர் மேனேஜிங் டைரக்டர் திரு. S.அகமத் மீரான் கலந்து கொண்டு உரையாற்றினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு மற்றும் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினர். BSNLEU தமிழ் மாநிலச் செயலர். தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K.கோவிந்தராஜ், அ.இ.அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K.ராகவேந்திரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் இணைப்புகுழு செயலர் தோழர். A.சுந்தரம், வேலூர் மாவட்ட  BSNL பொது மேலாளர் திரு.C.A. ரெட்டி, DGM திரு. V.மணி, AIBDPA அ.இ.அமைப்புச்செயலர்கள் தோழர். K.காளி பிரசாத். தோழர்.K. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மதிய இடைவேளைக்கு பின் பொருளாய்வுக்குழு நடைபெற்றது. சார்பாளர்களின் செழுமையான விவாதங்களுக்கு பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத்துறைகளை காப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment