Monday 22 June 2015

துடிப்பான தூத்துக்குடியில் சிறப்பான AIBDPA மாநிலச் செயற்குழு.

         14-06-2015 அன்று காலை 1010 மணி அளவில் மாநிலச் செயற்குழுவின் முதல் நிகழ்ச்சியாக AIBDPA சங்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி தூத்துக்குடி GM அலுவலம் முன்பு நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மன் தலைமையில் பொதுச் செயலர் தோழர். K.G.ஜெயராஜ், மத்தியச் சங்க நிர்வாகிகள், மாநிலச்சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் BSNLEU சங்க மாவட்டச் செயலர் தோழர். M.ஜெயமுருகன், மற்றும் AIBDPA, BSNLEU சங்கத் தோழர்கள், தோழியர்கள் முன்னிலையில் தூடி மாவட்ட வெட்ரன் தலைவர் & மாநிலத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் எழுச்சிமிக்க கோஷங்களுக்கிடையே கொடி ஏற்றிவைத்தார். வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

5 X 2 (BSNL 2015) copy

 செயற்குழு முடிவுகள் :-

  1. உறுப்பினர் எண்ணிக்கையை 2015 செப்டம்பர் மாதத்திற்குள் 3000 ஆக உயர்த்துவது.

  2. பாண்டிச்சேரி மாவட்ட மாநாட்டை 2015 ஜூலை மாதம் நடத்துவது.

  3. மதுரை மாவட்ட மாநாட்டை 2015 ஆகஸ்ட் மாதம் நடத்துவது. 

  4. மத்தியச் சங்க அறைகூவலுக்கிணங்க 2015 ஜூலை 21 &22 தொடர் உண்ணாவிரத போராட்டத்தை சென்னை CCA அலுவலகம் முன்பு நடத்துவது – சென்னை தொலைபேசி மாநிலத்தோடு நாமும் இணைந்து நடத்த வேண்டுகோள் விடுவது என முடிவு.

  5. மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக 2015 செப்டம்பர் 02ம் தேதி CITU, AITUC, INTUC, HMS, BMS போன்ற மத்திய  சங்கங்கள் நடத்த திட்டமிட்டுள்ள பொது வேலைநிறுத்தம் மற்றும் மாவட்ட மட்டத்தில் நடத்தும் கருத்தரங்கங்களில் பங்கேற்பது.

  6. செயற்குழுவை அனைவரும் பிரமிக்கும் வண்ணம் நடத்திய தூத்துக்குடி மாவட்டச் சங்கத் தோழர்களை மாநிலச்சங்கம் மனதார பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது. 

  7. FORUM of BSNL UNIONS / ASSOCIATION தமிழ் மாநில சங்கங்களின் முடிவுகளான தரைவழி / கைபேசி (Land Lines / Mobile) இணைப்புக்களை கணிசமாக உயர்த்திட நடைபெறும் இயக்கங்களில் AIBDPA மாவட்டச் சங்கங்களும் இணைந்து கலந்து கொண்டு பங்குபெற மாநிலச் செயற்குழு முடிவு.

No comments:

Post a Comment