Thursday 20 April 2017

மைசூரு மத்தியச்செயற்குழு முடிவை அமுல்படுத்த மாநிலச்சங்கம் வேண்டுகோள்.

1. 01-01-2017 முதல் பென்ஷன் மாற்றம் வழங்கப்பட வேண்டும் !

2. 01-01-2017 முதல் 50சத பஞ்சப்படியை ஓய்வூதியத்தோடு இணைக்க வேண்டும்.

3. மருத்துவப்படியினை உடனடியாக வழங்க வேண்டும்.

4. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஆப்ஷன் 1ஐ அனுமதிக்க வேண்டும்.

5. நிலுவையில் உள்ள DOT ஓய்வூதியர்களுக்கு பிராட்பேண்ட் சலுகை வழங்கவேண்டும்.

6. தொலைத்தொடர்பு ஊழியர் குடியிருப்புகளில் வாடகையாக 10சதம் ஓய்வூதியம் என்பது இருக்க வேண்டும்.

7. 01-01-2007 முதல் 78.2சத பஞ்சப்படி இணைப்பில் நிலுவைத் தொகையினை வழங்கிட வேண்டும்.

8. மருத்துவப்பில்களை வழங்குவதில் உள்ள தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

9. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

10. BSNL & DOT ஓய்வூதியர்களுக்கும் இரவு இலவச தொலைபேசி அழைப்பு வசதிகளை நீடிப்பு செய்ய வேண்டும்.

11. DOT ஓய்வூதியர்களுக்கு CGHS மருத்துவ வசதிகளை மீண்டும் வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க 3 கட்ட போராட்டங்களை மைசூரு மத்திய செயற்குழு அறிவித்தது. அதன்படி முதற்கட்ட போராட்டமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

    இரண்டாவது கட்ட போராட்டமாக அனைத்து மட்டங்களிலும் 2017 ஏப்ரல் 20ம் தேதி “கவன ஈர்ப்புதினம்”நடத்திடவும் ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும் அறைகூவல் விட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மட்டங்களிலும் “கவன ஈர்ப்புதினம்”  சக்திமிக்கதாக நடத்திட மாவட்டச் செயலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திட தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகிறது.


No comments:

Post a Comment