Wednesday, 23 December 2015

78.2 .காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் 

FORUM அறைகூவலுக்கு இணங்க ஓய்வூதியர்களுக்கு 78.2% DA  வழங்காமல்  இழுத்தடிப்பதை கண்டித்து காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தோழர் கள் திரளாககலந்துகொண்டனர்      

Monday, 21 December 2015

 

ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 % பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கி உடனே வழங்கிடக்கோரி கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம்.



பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட 78.2% பஞ்சப்படி இணைப்பு பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்காமல் காலதாமதம் செய்யும் DOT, BSNL நிர்வகத்தைக் கண்டித்தும் 78.2% பஞ்சப்படி இணைப்பை உடனே வழங்கிடக் கோரியும் மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2015 அன்று ” கருப்பு பேட்ஜ் ” அணிந்து கண்டன முழக்கமிட 10-12-2015ல் டெல்லியில் கூடிய அகில இந்திய FORUMத்தின் சார்பில்  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாநிலத்திலும் FORUMத்தின் முடிவினை அமுல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பொதுத்துறையை சீரழிக்கும் மத்திய அரசு 


கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு  பொதுத்துறை பங்குகளை விற்று பெற்ற தொகை


2013......................................  .ரூ 22000 கோடி 
2014....................................... .ரூ 18000கோடி 
2015...மோடி அரசு .............ரூ 35000கோடி  




Wednesday, 9 December 2015

சென்னை மற்றும் கடலூர் மக்களின் துயரில் பங்கெடுக்கும் விதமாக வெள்ள நிவாரண நிதி வழங்கிடுவோம்.

           கடந்த பல தினங்களாக சென்னை, கடலூர், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் சந்தித்திராத கனமழையால் (1650 மிமீ), பெருவெள்ளத்தால் பெரும் சேதங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சென்னை, கடலூர் மக்கள் தங்களது வாழ்வாதரங்களை (உடை, உணவு, குடிநீர், இருப்பிடம்) என அனைத்தையும் இழந்து வீதியில் உள்ளனர். அவர்களின் வீட்டிற்கு தேவையான அல்லது இருந்து அழிந்து போன அனைத்து  பொருட்களையும் மீட்டெடுக்க பல மாதங்கள் /வருடங்கள் ஆகலாம். ஆனால் உடனடித் தேவைகளை வழங்கிட குறைந்தபட்ச நிதி அவசிய அவசரமாகும்.

          பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவிட  பல தனியார் தொண்டு நிறுவனங்கள், பல மாநில அரசுகள், தனியார்கள் என தம்மால் இயன்ற பொருளுதவிகளை / நிதியினை வழங்கி வருகின்றனர். அந்த வழியில் நாமும் அவர்களுக்கு உதவிட நமது மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுகிறது.

                      மாவட்டச் சங்கங்கள் உரிய கவனம் செலுத்தி தங்களால் இயன்ற நிதியினை வசூலித்து மாநிலச் சங்கத்தின் வங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.

           மாநிலச் சங்க வங்கி கணக்கு எண் :

ALL INDIA BSNL DOT PENSIONER ASSOCIATION TAMIL NADU CIRCLE.

A/C NO. 31557138649 .

STATE BANK OF INDIA – SINMAIYA NAGAR Branch.

SAVINGS ACCOUNT,  

IFSC code : SBIN 0007990

Friday, 27 November 2015


78.2DA  ........COM NAMBOOTHIIRI MET  MEMBER..FINANCE
Today, 26th November, 2015 Com.V.A.N.Namboodiri, Advisor met Ms.Annie Moreas, Member (Finance),DOT and urged early forwarding of the revised cabinet note to Department of Expenditure. The Member (Finance) stated that she has already sent the file to Establishment Section for necessary further action. Com.V.A.N.Namboodiri thereafter wanted to meet the Member (services) to ascertain the progress but he could not meet him as he was in a meeting. However enquiries made in section has revealed that the Establishment section sent the file to the pension section and after that it is now sent to the PSU section in DOT.
Indian bureaucracy is proving to be the worst for its red tapeism  and non-accountability and we may have to think about further agitational program to make them move.

Wednesday, 11 November 2015

LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016

LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016 க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திட மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

                  தோழர்களே நமது ஓய்வூதியம் தொடர்ந்து பெற்றிட   LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்) 2016க்கு வரும் நவம்பரில் வங்கி / அஞ்சல் அலுவலகங்களில் அளித்திடவும் அதற்கான  ஒப்படைச்சீட்டு (Acknowledgement)  பெறுவதை ஒவ்வொரு தோழரும் உறுதி செய்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

           மேலும் தரைவழி தொலைபேசி பயன்படுத்தும் ஓய்வூதியர்கள்  2016ம் ஆண்டுக்கான LIFE CERTIFICATE (உயிர்வாழ் சான்றிதழ்)ழை CSCகளில் வழங்கிட வேண்டுகிறது. 

Wednesday, 14 October 2015

Monday, 21 September 2015

இரங்கல் 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 

கணக்கு அதிகாரியாகப் பணிபுரியும் 

தோழியர்.தேன்மொழி முருகேசன் அவர்களின் 

கணவர் - thiru சுப.முருகேசன் 

அவர்கள் 20/09/2015 - ஞாயிறு அன்று 
திடீர் உடல் நலக்குறைவால் 
  இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த வேதனையையும் 
இரங்கலையும்  உரித்தாகுகின்றோம்

Tuesday, 8 September 2015

அஞ்சலி 

FNTO சங்கத்தின் மூத்த தலைவரும்
தமிழ் மொழி பற்றாளருமான

தோழர்.
ஆண்டியப்பன்  

அவர்கள் உடல்நலக்குறைவால்  
இன்று 08/09/2015 
காரைக்குடியில் இயற்கை எய்தினார்.

AIBDPA KKD சார்பில்ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

Wednesday, 2 September 2015


2015 ஜூலை மாதத்தில் மொபையில்  சேவை இணைப்பு வழங்கியதில் நம்பர் ஒன்னாக BSNL.

             2015 ஜூலை மாதத் தில் BSNL நிறு வன ம் தா ன் அதிக மொபைல் இணைப்புக்களை கொடுத்து நம்பர் ஒன்னாக  முன்னணியில்  உள்ளது.

BSNL           :       16 லட்சம் இணைப்புகள்

AIRTEL         :        11.90 லட்சம் இணைப்புகள்

IDEA             :        10.25 லட்சம் இணைப்புகள்

          BSNL லின் மொபைல் இணைப்புகள் மே மாதத்தில் 8.6  லட்சமாகவும் ஜூன் மாதத்தில் 11 லட்சமாகவும் இருந்த விற்பனை இந்தளவு உயர்வுக்கு காரணம் 7வது கட்ட மொபைல் விரிவாக்கமும், இலவச ரோமிங் திட்டமும், ஊழியர்களின் உழைப்புமே ஆகும்.

       மேலும் MNP திட்டத்திலும் முன்னேற்றமே துவங்கியுள்ளது.   மற்ற ஆப்பரேட்டர்களுக்கு மாறியவர்களை விட மற்ற ஆப்பரேட்டர்களிடமிருந்து  BSNLலுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளது.  

மேலும் முன்னேற பாடுபடுவோம். வாழ்த்துக்கள்.





வெற்றிகரமாக நடைபெற்ற மத்திய சங்கங்களின் தேசம் தழுவிய வேலைநிறுத்தம் -ஆதரவாக அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தார்ணா மாவட்ட தலைநகரங்களில்.

Friday, 28 August 2015

காரைக்குடி FNTO 
சங்க கிளைச்செயலர்  அன்புத்தோழர்.

K.சேக் தாவூது TM

அவர்கள் இன்று 28/08/2015 மதியம்  
ஜும்மா தொழுகையில் 
இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் போதே
 இறைவனடி சேர்ந்தார்.

அனைவரிடமும் 
சகோதரத்துவமுடன் பழகிய தோழர். 
சங்க வித்தியாசம் இல்லாமல் 
நம்மிடம் மிகுந்த தோழமையுடன் 
பழகிய சகோதரர். 

வரது மறைவிற்கு AIBDPA KARAIKUDI
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம். 

Wednesday, 19 August 2015



AIBDPA அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில்.

              பெரும்பான்மையான மத்தியச் சங்க செயற்குழு மற்றும் அனைத்து மாநிலச் சங்கச் செயலர்களின் ஒப்புதலோடும் நமது அகில இந்திய மாநாடு 2015 டிசம்பர் 8,9 தேதிகளில் ஆந்திராவின் திருப்பதியில் வைத்து நடைபெறும் என நமது பொதுச் செயலர் தோழர்.K.G. ஜெயராஜ் அறிவித்துள்ளார்.

                     மத்திய செயற்குழு 2015 டிசம்பர் 7ம்தேதி நடைபெரும் எனவும் அதற்கான பயண ஏற்பாடுகளை மாநில, மாவட்டச் செயலர்கள் உரிய முறையில் செய்திட வேண்டியுள்ளார்

Tuesday, 18 August 2015




பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டில் ஒரு கோடியே 78 லட்சம் செல்ஃபோன் வாடிக்கையாளர்களையும் 20 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் இழந்ததாக தொலைத்தொடர்பு அமைச்சக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
 
தனியார் நிறுவனங்களை போல பிஎஸ்என்எல் வலுவான சந்தைப்படுத்தும் யுக்திகளை கையாளாதது அந்நிறுவனத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
 
மேலும் 2008-2012 காலகட்டத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்படாததும் அந்நிறுவனத்தின் நலிவுக்கு காரணமானதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக அந்த அலுவலர் தெரிவித்தார்.

Monday, 27 July 2015

அப்துல் கலாம்| கோப்புப் படம்

 ராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையிலும் செம்மையாக படித்து விஞ்ஞானியாக வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த பெருமைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் மரணம் நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவர்களை விரும்பி, உயிர் மூச்சாய் ஏற்ற கலாம் அவர்கள் மாணவர்களிடையே மரித்திருப்பது அவருடைய மாண்பையும், கடைசி நிமிடம் வரையிலும் சோம்பல் அண்டாமல் உழைத்த அவரது சுறுசுறுப்பின் வலிமையையே ஒவ்வொரு மாணவனுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

AIBDPA KARAIKUDI DIP ITS FLAG.....

Friday, 24 July 2015

சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.

                 மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.

கூட்டு தலைமை :

தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.

தோழர். B. சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.

22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார். 

              உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர். R. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU  & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.

Jpeg

Tuesday, 21 July 2015



உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தவர் : S. செல்லப்பா, அகில
Jpeg

 இந்திய உதவிச் செயலர் & மாநிலத்தலைவர், BSNLEU